ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 30 யூனிட் சிலிக்கான் மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் வழியாக சென்னைக்கு மணல் கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கனிம வளத்துறை உதவி இயக்குனர் சீனிவாசராவ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர பதிவு எண் கொண்ட லாரிகளை மடக்கிபோது 2 லாரி ஓட்டுனர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். ஒருவரை மடக்கி பிடித்து லாரியை பரிசோதித்தப்போது உரிய ஆவணங்களின்றி 30 யூனிட் சிலிக்கான் எனப்படும் உயர்ரக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்திய 3 லாரிகளையும் பறிமுதல் செய்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.