சில நாட்களுக்கு முன்பு அதானியின் பங்குகள் சரிவடைந்த செய்தியானது நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியது. அமெரிக்காவினைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் எனும் நிதிநிலை அறிக்கை நிறுவனம் அதானியின் பங்குகளில் முறைகேடுகள் இருப்பதாக அறிக்கை ஒன்றினை வெளியிட உலகப் பணக்காரர்களின் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி இன்று மிகவும் கீழிறக்கப்பட்டுள்ளார். மேலும் அவரின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. மீண்டும் அவரது நிறுவனத்தை கட்டமைக்கும் பணியில் அவரது நிறுவனத்தார்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து தற்போது நெற்றைக்கு உச்சநீதிமன்றமானது வெளியிட்டுள்ள உத்தரவில், இந்திய நிதிநிலை அமைப்பான செபியின் வரைமுறைகளை அதானி குழுமம் மீறியிருக்கிறதா என்றும் முறைகேடுகளில் ஏதேனும் ஈடுபட்டிருக்கிறதா என்றும் இரண்டுமாதங்களுக்குள் செபியானது ஒரு அறிக்கையினை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு ஆதரவுத் தெரிவித்திருக்கும் அதானி தனது டிவிட்டர் பக்கத்தில் வாய்மையே வெல்லும் என்று ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
The Adani Group welcomes the order of the Hon’ble Supreme Court. It will bring finality in a time bound manner. Truth will prevail.
— Gautam Adani (@gautam_adani) March 2, 2023
Discussion about this post