அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன்: தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதி

தன்னை மீண்டும் அதிபராக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் என்று தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளதாக ஆர்லண்டோவின் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

இதையடுத்து தேர்தல் பிரசாரத்தை துவக்கிய அவர், கடந்த தேர்தலில் தான் வெற்றி பெற்றது அமெரிக்க வரலாற்றில் முக்கிய தருணம் என்று தெரிவித்துள்ளார். தனது பதவி காலத்தில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், பலம் பொருந்திய நாடாக அமெரிக்கா தொடர்ந்து இருக்க தன்னை மீண்டும் அதிபராக்க வேண்டும் என்றும் டிரம்ப் கேட்டுக் கொண்டார்.

அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே என்ற கொள்கையில் தான் உறுதியாக உள்ளதாக கூறிய அவர், கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் வேலைவாய்ப்பு போன்றவை உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். குடியரசு கட்சியினர் நாட்டை அழிக்க பார்ப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

Exit mobile version