அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் வக்கீலை, நியமித்துள்ளார் அதிபர் டிரம்ப்.
இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த செரின் மேத்யூஷ் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார். சாண்டியாகோவில் உள்ள அமெரிக்காவின் 5-வது மிகப்பெரிய சட்ட நிறுவனத்தில் பணியாற்றி வரும் செரினை கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு மாவட்ட நீதிபதியாக அதிபர் டிரம்ப் தேர்ந்தெடுத்துள்ளார்.
இதையடுத்து அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலுக்கு செரின் மேத்யூசின் பெயர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.செனட் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் முதல் இந்திய வம்சாவளி நீதிபதி என்ற பெயரை செரின் பெறுவார்.