லாரி உரிமையாளர்களை மிரட்டி பணம் பறிக்கும் போக்குவரத்து துறையை கண்டித்தும், அதற்கு உடந்தையாக பணப்பறிப்பில் ஈடுபடும் காவல்துறையை கண்டித்தும், லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அதிகபாரம் ஏற்றி வரும் லாரிகளால் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும், இதனை தடுக்க பலமுறை மனு அளித்து, போராட்டங்கள் நடத்தியும், போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்டுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், வருகின்ற 28ம் தேதிக்கு பிறகு தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்படும் என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post