இந்தியா, ஜப்பான், அமெரிக்கா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது

இந்தியா, ஜப்பான், அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை, நாளை நடைபெற இருப்பதாக மத்திய வெளியுறத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

இந்திய-ஜப்பான் பிரதமர்கள் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, இரு பழமையான நண்பர்களின் சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக கூறினார். இருநாட்டு உறவு குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும் விரிவாக ஆலோசித்ததாக கூறிய விஜய் கோகலே, குறிப்பாக தலைமறைவான பொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளை, ஜப்பான் பிரதமர் பாராட்டியதாக தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து, ஊழல் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், ஜி20 மாநாட்டில் விவாதிக்கபடும் என ஜப்பான் பிரதமர் கூறியதாக சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நாளை நடைபெறும் முத்தரப்பு பேச்சுவார்த்தையில், இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரம் குறித்து விவாதிக்க இருப்பதாக தெரிவித்தார்.

Exit mobile version