திருச்சி சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் தேரோட்ட விழா விமர்சையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு ஆதி மாரியம்மன் திருக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இக்கோவிலில், கடந்த 10ஆம் தேதி புஷ்பாபிஷேகம் எனப்படும் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

அதை தொடர்ந்து, கடந்த 26ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை, தினசரி மாலை 6 மணிக்கு பல்வேறு வாகனங்களில், அம்மன் வீதி உலா வைபவம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

Exit mobile version