சென்னை மாநகராட்சியில் இதுவரைக்கு ஹெல்மட் அணியாமலும், மது அருந்தி வாகனம் ஓட்டுவது உட்பட ஏழு சாலை விதிமீறலில் மட்டும் கடந்தாண்டு 149 கோடி ரூபாயை போலிசார் அபராதமாக வசூலித்துள்ளனர். இது, கடந்த ஏழு மாதங்களில் 60 கோடி ரூபாயாக உள்ளது. இதில், மது போதையில் வாகன ஓட்டியதில் வசூலான தொகை 20 கோடி ரூபாயாகும்.
அதிகரித்திருக்கும் அபராதத் தொகை..!
கடந்தாண்டை விட இந்தாண்டு அபராத வசூலை அதிகப்படுத்த, போலிசார் அதிகமாக கெடுபிடி காட்டி வருகின்றனர். சாலை விதிமீறல் தொடர்பாக அதிகம் அபராதம் வசூலாகௌம் அண்ணா சாலை, அண்ணா நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன் சோதனை நடக்கும் ஒவ்வொரு இடத்திலும், தினமும் குறைந்தது ஒரு சப் இன்ஸ்பெக்டர் மட்டும் 50 வழக்குகள் பதிவு செய்கிறார். இப்பணியில் மட்டும் 300 சப் இன்ஸ்பெக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். இது தவிர, போலிசாருடன் சமரசம் செய்பவர்கள், மற்றும் தப்பியோடியவர்களின் கணக்கினை எடுத்தால் என்றால் இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
ஜனவரியில் இருந்து ஜூலை 15 வரை…
கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதில் 4,284 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21,42,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. சிக்னல் தாண்டி வாகனத்தினை நிறுத்திய வழக்கில் 39,320 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,96,60,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது. காரில் சீட் பெல்ட் அணியாததால் 9,101 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 91,01,000 ரூபாய் அபராதத்தொகை வசூலிக்கபட்டுள்ளது. அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 2,716 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 27,16,000 ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிப்பது தொடர்பாக 8,593 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 85,93,000 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 19,765 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19,76,50,000 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலைக்கவசம் அணியாமல் 3,61,655 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 36,16,55,000 ரூபாய் அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.
விதிமீறல்களுக்கு என்னனென்ன அபராதம்..!
ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மட் அணியாமல் இருப்பது, டூவிலரில் மூவர் செல்வது, மொபைல் போன் பேசியபடி ஓட்டுவது, ‘சீட் பெல்ட்’ அணியாதது போன்ற விதி மீறல்களுக்கு 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். மது போதையில் வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதத்தொகை விதிக்கப்படும். மது போதையில் ஓட்டுனருடன் உடன் இருந்தாலும் 10,000 ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்படும். வாகனத்தில் அதிவேகமாக சென்றால் 5000 ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்படும். விதிமீறிய நம்பர் பிளேட், விதிமீறிய விளக்கு, விதிமீறிய வண்ணங்கள், நோ என்ட்ரி, நோ பார்க்கிங், அதிக ஒலி எழுப்புவது, காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது, சிக்னல் மீறுதல் போன்ற விதி மீறல்களுக்கு ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.