சென்னையில் மெட்ரோ பணிக்காக போக்குவரத்து மாற்றம்

சென்னை போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக 2012ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி பெரியமேடு, மசூதி பாயின்ட் வரை ஒருவழிப்பாதையாக செயல்பட்டு வந்ததாகவும், சென்ட்ரல் மெட்ரோ கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டதால், ஈ.வே.ரா சாலை சந்திப்பில் இருந்து பெரியமேடு மசூதி பாயிண்ட் வரை இருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லிக்குளம் சாலை, ஈ.வே.ரா சாலை சந்திப்பில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் அல்லிக்குளம் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறு போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version