இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி ரன்னிமேடு ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டு, மின்விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மேட்டுப் பாளையத்திலிருந்து குன்னூர் செல்லும் மலை ரயில் ரன்னி மேடு ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும். ரன்னிமேடு ரயில் நிலையம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் உரிய பராமரிப்பில்லாமல் கடந்த சில ஆண்டுகளாக ரன்னிமேடு ரயில்நிலையம் மூடப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகளின் கோரிக்கையையடுத்து தற்போது, இந்த ரயில்நிலையம் புனரமைக்கப்பட்டு மின்விளக்குகள், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவுநேரங்களில் மின்விளக்குகளின் வெளிச்சம் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.