ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடல்பகுதி ஆபத்தானது : சுற்றுலாப் பயணிகள் பாதுகாக்கும் வகையில் எச்சரிக்கை பலகை

ராமேஸ்வரம் அரிச்சல்முனை கடல்பகுதி ஆபத்தானது என்பதை தெரிவிக்கும் வகையில், கடலோர காவல்படை சார்பில் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ராமநாத்புரம் மாவட்டம் தனுஷ்கோடியை அடுத்துள்ள அரிச்சல்முனை கடல்பகுதி, வங்கக்கடல், பாக்ஜலசந்தி மற்றும் மன்னர்வளைகுடா ஆகிய மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடமாகும்.

இந்த கடல் பகுதியில் விஷத்தன்மை வாய்ந்த ஜெல்லிமீன்கள் அதிகம் உள்ளன. இதேபோல், கடல் நீரோட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், அங்கு குளிக்கும்போது கடல்நீரோட்டத்தில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இதனால் இந்த பகுதியில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதை எச்சரிக்கும் வகையில், கடலோர காவல்படை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், கடலில் சிக்கி உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுடன் கூடிய எச்சரிக்கை வாசகங்கள்இடம்பெற்றுள்ளன.

Exit mobile version