சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சி

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் சுற்றுலா பொருட்காட்சியில், சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை சார்பில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை விவரிக்கும் வகையில், 50-க்கும் மேற்பட்ட அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக அரங்கில், மருத்துவக் கல்வி, தொழு நோய், காச நோய், புகையிலை தடுப்பு, பாரம்பரிய மருத்துவம் குறித்து விரிவான விளக்கங்கள் பொதுமக்களுக்கு எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது. இதில், அம்மா முழு உடல் பரிசோதனை மையமும் செயல்பட்டு வருகிறது. அரங்கிற்கு வரும் பொதுமக்களுக்கு 50 ரூபாய்க்கு 12 வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகளும் சுகாதாரத்துறையின் அரங்கில் வழங்கப்படுகிறது. சுற்றுலா பொருட்காட்சிக்கு வரும் பொதுமக்கள், சுகாதாரத்துறையின் அரங்கிற்கு சென்று, மருத்துவ ஆலோசனைகளை பெற்று செல்கின்றனர்.

Exit mobile version