குற்றாலம் மெயினருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருவதை அடுத்து, குற்றால அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு தொடங்கி, இன்று காலை வரை குற்றாலம் மெயின் அருவியில், தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. பாதுகாப்பு வளையத்தை தாண்டி, தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க, மெயின் அருவியில் மட்டும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் பழைய குற்றாலம், ஐந்தருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post