நீலகிரி மாவட்டம் உதகையில் குளு குளு சீசன் நிலவுவதால், பைக்கார அணையில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால், நீலகிரி மாவட்டத்தில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் உதகையில் கடும் குளிர் நிலவுகிறது. கோடை விடுமுறை முடிந்த பின்னரும், உதகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
முக்கிய சுற்றுலா தளமான பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சி பகுதியில் கூட்டம் அலைமோதுகிறது. சாரல் மழை மற்றும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
Discussion about this post