கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இதுவரை மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. பலரை காணவில்லை என்பதால் உயிர்ச்சேதம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இடுக்கி மற்றும் முல்லைப்பெரியாறு அணை உள்பட மொத்தம் 33 அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ரயில்களை மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் இயக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ள சேத நிலவரத்தைத் உள்துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்தி உள்ள மாநில அரசு கூடுதலாக நிவாரண நிதி ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
கடவுள் சேதத்திற்கு அடுத்த சிக்கல்?…
-
By Web Team
Related Content
கேரளாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை தீவிரம்
By
Web Team
July 12, 2021
மும்பையில் மீண்டும் கனமழை - தாழ்வான இடங்களில் தேங்கிய தண்ணீர்
By
Web Team
June 11, 2021
தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
By
Web Team
May 26, 2021
புது வரலாறு படைத்த கேரளா - அனைவரையும் ஈர்த்த அமைச்சர் தேர்வு
By
Web Team
May 20, 2021
கொரோனா தீவிரம்: மீண்டும் இ-பாஸ் கட்டாயம்
By
Web Team
April 19, 2021