உலக வெப்பமயமாதலுக்கு காரணமாக உள்ள பத்து நாடுகள்… இந்தியாவிற்கு என்ன இடம்?

நமது புவியானது தொடர்ந்து வெப்பமயமாதலுக்கு உள்ளாகி வருகிறது. இதனால் உலகின் பல்லுயிப்புத் தன்மையானது தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உலக நாடுகளிடம் மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வுகள் தொடர்ந்து சொல்லப்பட்டும் அறிவுறுத்தப்பட்டும் வருகிறது. தற்போது உலக வெப்பமயமாதலுக்கு எந்தெந்த நாடுகள் காரணம் என்கிற பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது.  இதில் அமெரிக்கா முதலிடத்தையும், இந்தியா ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளது.

உலக வெப்பமயமாதலுக்கு காரணமான நாடுகள் : 

1. அமெரிக்கா, 2. சீனா, 3. இரஷ்யா, 4. பிரேசில், 5. இந்தியா, 6. இந்தோனேசியா, 7. ஜெர்மனி, 8. இங்கிலாந்து, 9. ஜப்பான், 10. கனடா

1850 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவானது பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றுவதில் முதன்மை நாடாக உள்ளது. மேலும் அதே 1850 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை புவியின் 0.08 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கு இந்தியாவே காரணம் என்று சொல்கிறார்கள்.

புவி வெப்பமயமாதலானது கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகிய பசுமை இல்ல வாயுக்கள் அதிகம் உமிழப்படுவதால் ஏற்படுகிறது. அதிலும் இந்த மூன்று வாயுக்களில் கார்பன் டை ஆக்ஸைடு அதிக அளவு உமிழப்படுகிறது. 2021 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி கார்பன் டை ஆக்ஸைடு உமிழப்படுவதன் மூலம் 1.11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மீத்தேன் உமிழப்படுவதன் மூலம் 0.41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், நைட்ரஸ் ஆக்ஸைடு உமிழப்படுவதன் மூலம் 0.08 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் புவியில் அதிகரித்துள்ளது.

இதில் மிகவும் முக்கியமான செய்தி என்னவென்றால் 1992 ஆம் ஆண்டில் உலக வெப்பமயமாதலில் 17% பங்கு வகித்த தென்னாப்பிரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளின் 2021 ஆம் ஆண்டிற்கான வெப்பமயமாதல் பங்கு 23% அதிகரித்துள்ளது.

Exit mobile version