ஒசூரில் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் சாலைகளில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில் கீரை, காய்கறி, பழ வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக டன் கணக்கில் தக்காளிகள் ஒசூருக்கு வரத் தொடங்கியது. இதனால் ஒசூரில் உற்பத்தியாகும் தக்காளி முழுமையாக தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. தக்காளி விளைச்சல் அதிகரித்ததே விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படும் நிலையில், விவசாயிகள் தக்காளியை சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர்.