கேரளாவில் தக்காளி வைரஸ்! தக்காளிக்கும் வைரஸுக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தப்படுத்திக்கிட்டோம் என்கிறார்கள் சேட்டன்ஸ்!

கேரளாவில் தக்காளி காய்ச்சல் என்ற வைரஸ் குழந்தைகளை தாக்கி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? என்பதை குறித்து விளக்குகிறது இந்த செய்தி குறிப்பு…

தக்காளி வைரஸ்..!

கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடம் நீங்காத நிலையில், கேரளாவில் தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. உலக மக்களை 2 ஆண்டுகளாக ஆட்டிபடைத்தது கொரோனா வைரஸ். டெல்டா, ஒமிக்ரான் வகை உருமாறிய கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தின.  இந்நிலையில் கேரளாவில் புது வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.

தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸால் இதுவரை 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இந்த வைரஸ் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளிக்கும் இந்த வைரஸிற்கும் என்ன சம்பந்தம்..!

தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கும் என்ன தொடர்பு? தக்காளியினால் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறதா? அது தான் இல்லை.

காய்ச்சலில் வரக்கூடிய கொப்புளங்கள் சிவப்பாக இருப்பதால் இது தக்காளி காய்ச்சல் என்று சொல்லப்படுகிறது. மற்றபடி தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லை

இந்த தக்காளி காய்ச்சலானது மிதமாக பரவக்கூடிய நோய் என்றும் சளி, கொப்பளங்களிலிருந்து வரும் நீர், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மலம் ஆகியவற்றின் மூலம் பரவலாம் என்றும், தொற்று பாதிக்கப்பட்ட முதல் வாரத்தில் நோய் அதிகமாக பரவக்கூடிய ஆபத்து உள்ளது என்றும், மருத்துவ நிபணர்கள் கூறுகின்றனர்.

தற்போது கேரளாவில் தக்காளி காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல், தொண்டை எரிச்சல், நாக்கில் புண், தலைவலி, பாதங்களில் கொப்பளங்கள், பசியின்மை போன்றவை இதற்கு அறிகுறியாக கருதப்படுகிறது.

தடுக்கும் வழி என்ன?

தக்காளி காய்ச்சலை எப்படி தடுக்கலாம் இதற்கு தனிப்பட்ட சிகிச்சை இருக்கிறதா என்றால் எதுவும் இல்லை என்பது தான், அதற்கு பதில். காய்ச்சல், வலி, வாய்ப்புண் போன்ற நோய்களுக்கான சிகிச்சையே இதற்கு வழங்கப்படும் என்றும், இது கொரோனா போன்றோ, நிப்பா வைரஸ் போன்றோ அச்சப்பட தேவையில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆகவே மற்ற நோய் பரவலியிருந்து தப்பிப்பதற்கு எவை முக்கியமான வழிமுறைகளாக கருதப்பட்டதோ, அதே யுக்தியான கை கழுவுதல்,சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ளுதல் போன்றவையே தக்காளி வைரஸ் காய்ச்சயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான முக்கிய வழிமுறைகள் ஆகும்.

 

Exit mobile version