தக்காளியின் History! தக்காளியை நம் சமையல் கட்டுக்குள் புகுத்தியது யார்?

தக்காளியினை முதன் முதலில் பயிரிட்டது யார்?

பெரு, சிலி, பொலிவியா ஈகுவடார் ஆகிய நாடுகளில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில்தான் முதன் முறையாகத் தக்காளி பயிரிடப்பட்டதாக நம்பப்படுகிறது. கிபி 700 களில் ஆஸ்டெக்ஸ் மற்றும் இன்காஸ் கலாச்சாரங்களில்  தக்காளி பயிரிடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று தாவரவியலாளர் ரவி மேத்தா தனது ஆய்வுக் கட்டுரையில் குறீப்பிட்டுள்ளார். எனினும் ஆண்டிஸ் மலைப் பகுதிகளில் பயிரிடப்பட்ட தக்காளியில் புளிப்புச்சுவை அதிகமாக இருந்துள்ளது. இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  இங்கு மனித இனத்தால் பயிரிடப்பட்ட தக்காளியானது அளவில் சிறியதாகவும் புளிப்புச் சுவை மிகுந்தவையாகவும் உள்ளது என ரவிமேத்தா  குறிப்பிடுகிறார். மேலும் தக்காளியானது தென்னமெரிக்காவில் இருந்து மத்திய அமெரிக்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்று ஒரு வரலாற்றுத் தகவல் இருக்கிறது. ஆனால் தக்காளி பயிருடுதல் எங்கே முதன் முதலில் பயிரிடப்பட்டது என்று ஆதாரப்பூர்வ தகவல் இல்லை.

தக்காளி இந்தியாவுக்கு எப்படி வந்தது?

போர்ச்சுகீசியர்கள்தான் தக்காளியினை இந்தியாவிற்குள் அறிமுகப்படுத்தினார்கள் என்று உணவு வரலாற்று ஆசிரியர் கே.டி. அட்சயா கூறியுள்ளார். தக்காளி மட்டுமல்லாமல்,  மக்காச்சோளம், வெண்ணெய், முந்திரி, குடை மிளகாய் உட்பட்ட உணவுப் பொருட்களையும் போர்ச்சுக்கிசியர்களே அறிமுகப் படுத்தியுள்ளார்கள். இந்தியாவின் தட்பவெப்பமும், மண்வகைகளும் தக்காளி பயிருடுவதற்கு ஏற்றது ஆகும். இந்தியாவில் எங்கு முதன் முதலில் எங்கு பயிரிடப்பட்டது என்றும் நமக்கு கிடைக்கவில்லை. சொல்லப்போனால் தக்காளிக்கு இந்திய அளவில் 200 ஆண்டுகால வரலாறு கூட கிடையாது. அன்றைக்கு புளியை விட தக்காளி விலைக் குறைவாக இருந்ததால் புளிக்கு மாற்றாக தக்காளியானது சமையலில் பயன்படுத்தப்பட்டது. ஆனல இன்றைக்கு தக்காளி இல்லாமல் சமையலே இல்லை என்று ஆகிவிட்டது. இதுவெல்லாம் வெறும் 30 ஆண்டுகளில் நடந்தேறிய மாற்றங்கள் மட்டுமே.

உலக அளவில் தக்காளி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 20 மில்லியன் டன் தக்காளியானது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் மத்திய பிரதேசம் 14.63%,  ஆந்திராவில் 10.92 %,  கர்நாடாகவில் 10.23% தக்காளியானது பயிரிடப்படுகிறது.

Exit mobile version