டிஜிட்டல் உலகத்தின் பெரும் கவலைகளில் ஒன்று மின்னணுக் (எலெக்ட்ரானிக்) கழிவுகள். ஆண்டுதோறும் வளர்ந்து கொண்டே இருக்கும் மின்னணுப் பயன்பாடு, மின்னணுக் கழிவுகளையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா என்னும் ஒரு நாட்டிஒல் மட்டும் ஆண்டுதோறும் உருவாகும் மின்னணு கழிவுகளின் அளவு 17 லட்சம் டன். (2020 கணக்கின்படி) 2012ம் ஆண்டில் இது 8 லட்சம் டன்னாக இருந்தது. எனில் உலகளாவிய மின்னணுக் கழிவுகள் குறித்து கற்பனை செய்து கொள்ளுங்கள்.
இந்நிலையில், ஒலிம்பிக்கின் பதக்கங்களை உருவாக்குவதற்கான உலோகங்கள் மின்னணுக் கழிவுகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் என்ற முடிவை ஒலும்பிக் கமிட்டி எடுத்துள்ளது பலவேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.
ஜப்பான் டோக்கியோவில் வருகிற 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. அதைத் தொடர்ந்து பாரா ஒலிம்பிக்கும் நடக்கிறது. இந்த போட்டிக்காக ஆயிரக்கணக்கான தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் தயாராகி உள்ளன.
இந்த பதக்கங்களில் மறுசுழற்சி செய்யப்பட்ட பழைய எலக்ட்ரானிக் பொருட்களின் உலோகங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பழைய லேப்டாப், பயனற்ற ஸ்மார்ட் செல்போன்கள், டிஜிட்டல் கேமராக்கள் உள்ளிட்டவற்றை உடைத்து அதில் இருந்த உலோகங்களை பிரித்து பதக்கம் தயாரிப்பில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சூழலியல் கவலையை சுமூகமாகத் தீர்க்கும் முடிவு இது. இதற்காக ஜப்பான் மக்கள் ஏராளமான எலக்ட்ரானிக் பொருட்களை நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.