ஒரே ஆண்டில் ஒரு கோடி குழந்தைகளின் எண்ணிக்கை வீழ்ச்சி! ஜப்பானில் நடப்பது என்ன?

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் மக்கள் தொகை எண்ணிக்கை  என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.  இந்த வரிசையில்  ஜப்பான்  நாடு மிகவும் பின்தங்கி உள்ளது. ஏனெனில் அந்நாட்டில்  குழந்தைகள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையானது 1 கோடிக்கும் குறைவாக உள்ளதாக அந்நாட்டு அரசு புள்ளிவிவரங்களை  வெளியிட்டு உள்ளது.

டோக்கியோ:

ஜப்பான் அரசானது  1986 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் குழந்தைகள் உள்ள குடும்பங்களின்  எண்ணிக்கை  குறித்து  புள்ளிவிவரங்களை சேகரித்து வருகிறது.   இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு 2022-ல் கணக்கெடுப்பின் படி குழந்தைகளின் எண்ணிக்கையானது  1 கோடிக்கும் குறைவாக குறைந்து உள்ளதாக ஜப்பான் சுகாதார மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சகம்  தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ’முதன்முறையாக’ குழந்தைகளின்  எண்ணிக்கை 1 கோடிக்கும் கீழ் குறைந்துள்ளது எனவும். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுடன் கூடிய குடும்பங்களின் எண்ணிக்கை 9.9 மில்லியனாகவும் உள்ளதாக தெரிவித்தது. இந்த கணகெடுப்பை 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்  3.4 சதவீதம் குறைவாக உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்து உள்ளது.

 புள்ளிவிவரங்கள்:

ஜப்பானில் 49.2 சதவீத வீடுகளில் ஒரே ஒரு குழந்தையும், 38 சதவீத வீடுகளில் 2 குழந்தைகளும், 12.7 சதவீத வீடுகளில் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளும் உள்ளதாக  புள்ளிவிவர அடிப்படயில் கூறப்படுகிறது.  1899 ஆண்டுக்கு பின்னர், 2022-ல் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 6 லட்சத்திற்கும் மேலாக குறைவாக உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவிக்கிறது.  இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் முடிவில் அந்நாட்டு அரசு கடந்த ஜூன் மாதம் குழந்தை வளர்ப்பு விகிதத்தை சரிவில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது.

அப்போது, பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அதிகாரிகளில் ஒருவரான மசாகோ மோரி கூறுகையில், “நாட்டில் பிறப்பு விகிதம் இதேபோல் குறைந்துகொண்டே இருந்தால் இன்னும் சில காலத்தில் ஜப்பான் என்ற  ஓரு நாடு ஆசிய கண்டத்திலேயே இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார். இந்த மாதிரியான சூழ்நிலையை இனிவரும்  காலங்களில் நடக்காதவாறு தடுக்க வேண்டும் என்று, மேலும் இதனை தடுக்க  நம்மால் மட்டுமே முடியும் என்றும் கூறினார்.  இதற்கு மக்கள் மட்டுமே உதவ முடியும். இந்தப் பேரழிவை ஏற்படுத்தும் போக்கை அவர்கள் மட்டுமே சரி செய்ய முடியும்.  ஏனெனில், ஜப்பான் நாட்டின்  குழந்தைகளின் பிறப்பு விகிதம் என்பது படிப்படியாக குறையவில்லை. ஒரே ஆண்டில் கனவில் கூட நினைத்து பார்க்காதவாறு  தலைகீழாக சரிந்து உள்ளது. இது போன்ற சரிவை வரும் காலங்களிள்  ஜப்பான் எதிர்கொள்ளாதவாறு நாம் பார்த்துகொள்ள வேண்டும். இந்த நிலமை நீடித்தால் ஜப்பன் நாட்டு மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும் என்றும் இது சமூகத்தை சுருக்கி செயல்பட ஆரம்பிக்கும் நிலை வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version