புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கண்ணாடித் தாவரம்.. எந்த ஊரில்?

மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவமாக இருக்கக்கூடிய ஒன்று தாவரம். மனிதர்களுக்கு ஆக்ஸிஜனை தாவரங்கள் தான் வழங்குகின்றன என்பது பேருண்மை. ஒவ்வொரு வருடமும் ஆராய்ச்சியாளர்களால் புதிய வகைத் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஜப்பானைச் சேர்ந்த அறிவியலாளர்கள்  மென்மையான கண்ணாடி போன்ற பூக்களைக் கொண்ட வண்ணமலர் (ஆர்க்கிட்) வகைச் செடியினை கண்டுபிடித்துள்ளார்கள்.

இந்த புதிய வகைத் தாவரத்திற்கு ஸ்பைரெந்தஸ் ஹச்சிஜோன்சிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. ஜப்பானிய பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் இச்செடிவகை காணப்பட்டிருந்தாலும் பத்தாண்டுகாலமாக இதன் வகையைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. தற்போதுதான் அதன் வகை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஸ்பெர்ந்தஸ் என்பது பொதுவாக லேடீஸ் ட்ரெஸ் என்று அழைக்கப்படும் ஆர்ச்சிடோய்டே வகை துணைக்குடும்பத்தினை சார்ந்ததாகும். இந்த வகைச் செடியானது அமெரிக்கா, யூரேசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டப் பகுதிகளில் காணப்படுகிறது. சுமார் 50 வகையான தாவரங்கள் இந்த இனக்குடும்பத்திற்கு கீழுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version