தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதே சமயம் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மழை பெய்யும் போது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையை பொறுத்தவரை 80 டிகிரி பாரன்ஹீட் முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version