வார விடுமுறையை ஒட்டி, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால், தமிழ் சினிமா வரலாற்றில், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் இன்று 11 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஆர்யா நடிப்பில் கஜினிகாந்த், தம்பி ராமையா இயக்கி நடித்திருக்கும் மணியார் குடும்பம், கிஷோர் நடிப்பில் உருவாகியிருக்கும் கடிகார மனிதர்கள் உள்ளிட்ட படங்கள் மட்டுமே, மக்களுக்கு பரிட்சியமான நடிகர்கள் நடித்துள்ள படங்களாக வெளிவந்துள்ளன. நாடோடி கனவு, அரளி, உப்பு புலி காரம், காட்டு பயன் சார் இந்த காளி, எங்க காட்டுல மழை, ஓ காதலனே, அழகு மகன், கடல் குதிரை உள்ளிட்ட புது முக நடிகர்களின் படங்களும் இன்ற ஒரே நாளில் வெளியாகி உள்ளன. 11 திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ளது, தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இன்று ஒரே நாளில் 11 திரைப்படங்கள் வெளியீடு
-
By Web Team

- Categories: சினிமா, செய்திகள்
- Tags: திரைப்படங்கள்திரைப்படங்கள் வெளியீடு
Related Content

ஊரடங்கில் திரையரங்கின் வெற்றிடத்தை நிரப்பியுள்ளதா ஓ.டி.டி. தளம்? - ஓர் அலசல்
By
Web Team
October 10, 2020

திரைப்படங்களை உரிய அனுமதியின்றி பதிவு செய்தால் 3 வருட சிறை தண்டனை
By
Web Team
February 7, 2019

பண்டிகை தினங்களில் விருப்பப்படி படங்களை வெளியிடலாம் : தயாரிப்பாளர்கள் சங்கம்
By
Web Team
December 7, 2018

இலவச திட்டங்களை குறைகூறுபவர்கள் தங்கள் படங்களுக்கு வரிவிலக்கு கேட்க மாட்டோம் என கூற முடியுமா? - அமைச்சர் சி.வி.சண்முகம்
By
Web Team
November 28, 2018