காலிங்கராயன் கால்வாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினத்தையொட்டி, ஈரோடு அருகே உள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக காலிங்கராயன் கால்வாய் திகழ்ந்து வருகிறது. 1283ஆம் ஆண்டு வெட்டப்பட்ட காலிங்கராயன் கால்வாய் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினமாக, தை மாதம் 5ஆம் தேதியை விவசாயிகளும் பொதுமக்களும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, காலிங்கராயன் தினத்தையொட்டி, ஈரோடு அடுத்த காலிங்கராயன் பாளையத்தில் உள்ள மணிமண்டபத்தில் உள்ள காலிங்கராயன் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், கே.வி.ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசுப்பிரமணி, தென்னரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, செல்வகுமார் சின்னையன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Discussion about this post