ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து 28 ,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

24 கேரட் தங்கம் கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 771 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 168 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 591 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 728 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 46 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 100 ரூபாய் குறைந்து, 46 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

 

Exit mobile version