ஓசூர் அருகே விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானை கூட்டத்தை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன. தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த காட்டுயானைகள் 15 நாட்களுக்கு முன்பாக ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு 15 காட்டுயானைகள் வந்தன. இவை இராமாபுரம்,ஆழியாளம்,போடூர் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகி இருந்த ராகி,தக்காளி, கோஸ், கத்தரி செடிகள் உள்ளிட்டவையை சேதப்படுத்தி உள்ளன. யானைகள் தொடர்ந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால், உடனடியாக யானைகளை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டுமென விவசாயிகள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post