டிஎன்பிஎஸ்சி ஆலோசனை. கடந்த வாரம் மார்ச் 24 ஆம் தேதிடிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) முனியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் சர்ச்சைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
குரூப் 4 தேர்வில் காரைக்குடி தேர்வு மைய்யத்தல் சுமார் 700 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக வெளியான தகவல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மனத்தை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான குரூப் 4 தேர்வில் பல தேர்வர்களுக்கு தேர்வு முடிவு வெளியாகவில்லை என்ற தேர்வர்களின் குற்றச்சாட்டு குறித்து விசாரணையில் ஈடுபட உள்ளது டி.என்.பி.எஸ்.சி. சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.