டிஎன்பிஎஸ்சி குரூப் 4.. தமிழ்த் தகுதித்தேர்வில் மட்டும் ஐந்து லட்சம் பேர் தோல்வி..!

மார்ச் 24 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி யின் குரூப் 4 தேர்வின் முடிவுகள் வெளியிட்டப்பட்டது. 18லட்சத்து 36 ஆயிரத்து 534 பேர் இந்த தேர்வினை எழுதியிருந்தார்கள். இந்தத் தேர்வில் ஒரு குறிப்பிட்ட தனியார் மையத்தினை சேர்ந்த தேர்வர்கள் மட்டுமே 2000 பேர் வரை தேர்வு ஆகியுள்ளார்கள் என்கிற குற்றச்சாட்டானது தொடர்ந்து எழுந்த வண்னம் இருந்தது. மேலும் தட்டச்சாளர் முடிவுகளில் குளறுபடிகள் உள்ளன என்று சிலர் தொடுத்த புகாரில் டிஎன்பிஎஸ்சி தரப்பானது ஒரு தகவலைக் கூறியது. அதன்படி, தமிழ்த் தகுதி தேர்வில் தகுதி பெறாதவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்காது. அவர்களின் பொதுஅறிவு தாளானது திருத்தப்பட்டிருக்காது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் தமிழ் தகுதித் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். அதனால் முடிவுகளில் உங்களுக்கு சற்று குழப்பம் இருக்கும் என்று டிஎன்பிஎஸ்சி தரப்பு பதிலொன்றை தந்துள்ளது.

Exit mobile version