குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?.. மார்ச் பிறந்துவிட்டது அரசே..தேர்வர்கள் கவலை..!

டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூலை 24 ஆம் தேதி ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுகளை நடத்தியது. இரண்டு வருடங்கள் கொரோனாத் தொற்றுக் காரணமாக தாமதமாக நடந்த இந்தத் தேர்வினை பல லட்சக் கணக்காணோர் எழுதியிருந்தனர். ஆனால் அதற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிட்ட பாடில்லை. கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி  நடந்த குரூப் 2 முதன்மைத் தேர்விலும் அவ்வளவு குழப்பங்கள், குழறுபடிகள். பலர் தேர்வறையைவிட்டு வெளியேறுகையில் கண்ணீருடன் தான் சென்றனர். பல லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பிலும் வாழ்க்கையிலும் இந்த அரசு விளையாடி வருகிறது என்று பலர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள்.

ஒவ்வொரு தேர்வருக்கும் ஒரு கனவு, இலட்சியம் இருக்கும். தான் வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தினை நேர் செய்ய முடியும் என்கிற பொறுப்பு பல தேர்வர்களுக்கு இருக்கும். திருமணம், சம்பாத்தியம், வருங்கால வாழ்வு, வறுமைப்பிடியில் இருந்து விடுபடல் எனப் பல எண்ணங்கள் அவர்களின் மனதிற்குள் கொழுந்துவிட்டு எரியும். அரசு வேலைக்காக தங்களுடைய நேரத்தையும் பல ஆண்டுகளையும் செலவழித்து அதற்காக தங்களை முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபடுத்தி பல நாட்கள் கழித்து இந்த தேர்வினை எழுதி உள்ளார்கள். கிட்டத்தட்ட தவம் செய்வது போல அவர்கள் இந்தத் தேர்விற்கு தயாராகி இருந்துள்ளனர். அவர்களின் எதிர்கால கனவையும், தவத்தினையும் கலைப்பதாக இந்த விடியா அரசு செயல்படுகிறது. இதோ மார்ச் பிறந்து விட்டது. மார்ச்சில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த மாதமாவது வெளியாகுமா என்று தேர்வர்கள் பலர் கேள்வியெழுப்பியும் குழப்பத்திலும் உள்ளார்கள்.

Exit mobile version