டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 700 பேர் தேர்வானதாக தகவல் வழியாக உள்ளது இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு சட்டசபையில் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் கருவூல அதிகாரிகள் துணையுடன் கேள்வித்தாள்களை முன்கூட்டியே லீக் செய்து தேர்வு எழுதியதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய நில அளவையர், வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. 1338 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை சுமார் 29 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, கலந்தாய்வில் தேர்ச்சி பெற்ற பணியாளர்கள் விவரம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் காரைக்குடி தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர் வெற்றி பெற்றுள்ளனர் என்பதும் அம்பலமானது. அதிலும் 700க்கும் அதிகமானோர் காரைக்குடியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் என தெரிய வந்தது. இது குறித்த புகாரை தொடர்ந்து உரிய விசாரணை நடத்துவதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் நேற்று தகவல் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது கருவூல அதிகாரிகள் துணையுடன் கேள்வித்தாள்களை முன்கூட்டியே லீக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மயிலாடுதுறையை சேர்ந்த பல இளைஞர்கள், தென்காசியில் தேர்வு எழுதியதும் தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து உரிய விசாரணை செய்து தவறு செய்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மீதும், தவறு இழைக்க உறுதுணையாக இருந்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தேர்வுகள் மத்தியில் வலுத்துள்ளது.
பேரவையில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் காரைக்குடி தேர்வு மையத்தில் 700 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியதி வெற்றி பெற்றிருப்பது, அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதாகவும், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாகவும் கூறினார். அப்பொழுது பிற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் குற்றம் சாட்டி பேசத் தொடங்கிய பொழுது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள், ஒரே மையத்தில் 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதன் மூலம், முறைகேடு நடந்து உள்ளது என்பதும், அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளது என்பது குறித்தும் தெளிவாகிறது என்றும் கூறினார். டிஎன்பிஎஸ்சி தேர்வில் இதுபோல் முறைகேடு நடப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கூறினார்.