டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வெடித்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இந்த ஆளும் அரசு குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு எட்டு மாதங்கள் தாமதம் ஆக்கியது. அதுவுமே தேர்வர்களின் தொடர் கோரிக்கைகள் மற்றும் எதிர்க்கட்சியின் தொடர் வலியுறுத்தல்களின் விளைவாக இந்த அரசு தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதிலும் தென்காசியைச் சேர்ந்த ஒரு தனியார் பயிற்சி மையம் எங்கள் மையத்தில் படித்த 2000 பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்று ஒரு கருத்தைத் தெரிவித்தது. இக்கருத்து தேர்வர்கள் மத்தியில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இப்போது ஒரு முக்கியத் தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சங்கரன்கோவில் பகுதியிலிருந்து மட்டுமே 450 நபர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள். இச்செய்தியும் தேர்வர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சியை நம்பி படிப்பவர்களின் நம்பிக்கையை இச்செய்திக் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.
Discussion about this post