டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடுகளை உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையின் மூலம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வு முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நில அளவர் மற்றும் குரூப் 4 தேர்வு முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் நில அளவர் வரையாளர் உள்ளிட்ட பணிகளில் 189 பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. அந்த தேர்வை தமிழகம் முழுவதும் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளனர் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் பிப்ரவரி 15ஆம் தேதி வெளியாக தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வுக்கான பணிகள் நடைபெற்று வந்தன இதற்கிடையே தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பதிவு எண்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
காரைக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்றும் அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட தனியார் மையத்தில் படித்தவர்கள் என கூறப்படுகிறது. இது தவிர சமீபத்தில் வெளியான குரூப் 4 தேர்வுகளிலும் தென்காசியில் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் படித்த 2 ஆயிரம் பெயர் தேர்வில் வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளதாகவும் மேலும் இந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வின் போது வினாத்தாள்கள் வரிசை எண் மாறியதால் தேர்வு எழுதுபவர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இது போல் தொடர்ந்து பல்வேறு கொடுக்கும் போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்று வருவது வருத்தத்திற்குரியது குறிப்பிட்டுள்ள உறவுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் புதிய நடவடிக்கைகள் நாம் எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.