தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
29.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.05.2023 முதல் 02.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
29.05.2023 மற்றும் 30.05.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சிவகங்கை, எலந்தகுட்டை மேடு (ஈரோடு) தலா 4, குப்பணம்பட்டி (மதுரை), ஹரூர் (தருமபுரி), பேரையூர் (மதுரை), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), கரியகோவில் அணை (சேலம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), கிருஷ்ணகிரி, முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) தலா 3, KRP அணை (கிருஷ்ணகிரி), தளி (கிருஷ்ணகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), கயத்தாறு (தூத்துக்குடி), ஈரோடு (ஈரோடு), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்) தலா 2, உதகமண்டலம் (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), பேனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), வீரகனூர் (சேலம்), தென்பரநாடு (திருச்சி), ஆத்தூர் (சேலம்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), நாலுமுக்கு (திருநெல்வேலி), சின்கோனா (கோயம்புத்தூர்), கல்லட்டி (நீலகிரி), ராமநாதபுரம், வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கங்கவல்லி (சேலம்), கயத்தாறு ARG (தூத்துக்குடி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), மாரண்டஹள்ளி (தருமபுரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
30.05.2023 மற்றும் 31.05.2023: இலட்சதீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
01.06.2023 மற்றும் 02.06.2023: மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
Discussion about this post