தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவையிலும் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக கிழக்கு கடற்கரையோர பகுதிகளிலும், சென்னையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.