எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து..!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக பொதுச்செயலாளருக்கு தன்னுடைய வாழ்த்தினை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் அக்கட்சியின் கெளரவத் தலைவர் ஜி.கே.மணியும் தன்னுடைய வாழ்த்தினை பொதுச்செயலாளருக்கு தெரிவித்தார். அவருடன் பாமக சட்டமன்ற உறுப்பினர்களும் பொன்னாடைப் போர்த்தி எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி கே பழனிசாமி அவர்களை செல்பேசியில் தொடர்புகொண்டு தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்தார்.

Exit mobile version