அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேயிலா சென்றுள்ள கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சிட்னி பல்கலைக் கழகத்தை பேராசிரியர்களுடன் கலந்துரையாடினார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையிலான மூவர் குழு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக ஆஸ்திரேலியா சென்ற அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டேவிட் எமெரி தலைமையிலான குழுவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மாணவர்கள், பேராசியர்கள், விஞ்ஞானிகள் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதற்கு இந்த சந்திப்பின் போது ஒப்புதல் பெறப்பட்டது. சேலத்தில் அமையவுள்ள ஒருங்கிணந்த கால்நடைப் பூங்காவை பார்வையிடவும், அதில் சிட்னி பல்கலைக்கழக பங்கேற்பினை அளிக்கவும் அறிஞர்கள் குழு தமிழகம் வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கால்நடைப் பல்கலைக் கழகத்துடன் சிட்னி பல்கலைக்கழகம் இணைந்து ஆராய்ச்சி மையம் தொடங்கவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
Discussion about this post