கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாழைத் தார்களை பாதுகாக்க, மேற்கூரை அமைத்து கொடுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வோளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் வாழைத்தார்கள் ஏலம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அறுவடை செய்த வாழை தார்களை மழை, வெயிலிலிருந்து பாதுகாக்க மேற்கூரை அமைத்து கொடுக்க விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இதையடுத்து, 25 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் மேற்கூரை அமைக்க அரசு உத்தரவிட்டது. கடந்த இரண்டு மாதங்களாக மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று தற்போது முடிவுற்றுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேற்கூரை அமைத்து கொடுத்த கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கும் அரசுக்கும் விவசாயிகள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.