ஊரகப்பகுதிகளில் 300 புதிய ஊராட்சி மன்ற கட்டடங்களை கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊரகப்பகுதிகளில் பழுதடைந்த நிலையிலுள்ள ஊராட்சி மன்ற கட்டடங்களுக்கு பதிலாக, புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்கள் கட்டுவதற்கான அறிவிப்பை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
அதன்படி தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 300 ஊராட்சி மன்ற கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, ஒரு கட்டடத்துக்கு தலா 19 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் 300 கட்டிடங்களுக்கு, 59 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக சார்பில் அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.
Discussion about this post