இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் பணியாளர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்களில் 6-வது ஊதியக்குழுவின்படி சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு, அரசாணையின்படி கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் உதவித்தொகை நிர்ணய வருமானமுள்ள கோவில் பணியாளர்களுக்கு, அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி 154 விழுக்காடாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு பகுதிநேர பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், தொகுப்பு ஊதியம் பெறுவோர் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர், பட்டியலில் இடம் பெறாதவர்கள் ஆகியோருக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.