தென்பெண்ணை ஆற்றின் நீர் பங்கீடு தொடர்பாக நடுவர்மன்றம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை மனு அளித்துள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியின் குறுக்கே ‘யர்கோல்’ என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்கக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதனை, விசாரித்த உச்ச நீதிமன்றம் தென்பெண்ணை ஆற்றுநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசை உரிய கோரிக்கை மனுவுடன் 4 வாரத்துக்குள் அணுக வேண்டும் என, கடந்த நவம்பர் 14ம் தேதி உத்தரவிட்டதுடன், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post