2017-ல் நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
2017 நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், தேர்வை ரத்து செய்வதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனிடையே தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இவ்வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு முறையிட்ட நிலையில், வரும் 4 ஆம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Discussion about this post