சட்டமன்றத் தேர்தலுக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
2021 – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, போக்குவரத்துத்துறை செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., அவர்களின் செய்தி வெளியீடானது, 23.03.2021
அன்று தலைமைச் செயலகத்தின் வாயிலாக வெளியிடப்பட்டது.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
- வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 01.04.2021 முதல் 05.04.2021 வரையிலான 5 நாட்களுக்கு சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 3,090 பேருந்துகள் என ஆகமொத்தம் 14,215 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.
- மேலும், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
- மேற்குறிப்பிட்டுள்ள 5 நாட்களில் 01.04.2021 முதல் 03.04.2021 வரையில் நாள்தோறும் இயக்கப்படுகின்ற பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
- குறிப்பாக, விடுமுறை நாளான ஞாயிறு (04.04.2021) மற்றும் திங்கட்கிழமை (05.04.2021) ஆகிய இரு நாட்களுக்கு மட்டும் இயக்கப்படுகின்ற பேருந்துகள், பண்டிகை நாட்களான பொங்கல் மற்றும் தீபாவளி நாட்களில் இயக்கப்பட்டது போன்று, பின்வரும் அட்டவணையில் கண்டுள்ள இடங்களிலிருந்து இயக்கப்படுகின்றன
Discussion about this post