சட்டமன்றத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உரை..!

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது தகுதியுள்ள பெண்கள் என்று சொன்னால் வாக்களித்த பெண்கள் திமுக அரசை நம்புவார்களா என வேப்பனஹல்லி அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஓசூருக்கு வரும் தொழிற்சாலைகளை தருமபுரிக்கு கொண்டுவர வேண்டும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஓசூர் – தரும்புரி 4 வழிச்சாலை நிறைவடையும் தருவாயில் உள்ளது என்ற அவர், ஓசூர் பகுதிக்கு எராளமான தொழிற்சாலைகள் உள்ளதால், அருகில் இருக்கும் மாவட்டமான தருமபுரியில் தொழிற்சாலைகளை ஏற்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார். பெங்களூர் நகரம் அருகில் இருப்பதால் ஓசூரை சுற்றி பல தொழிற்சாலைகள் வருகின்றன. அவற்றை தரும்புரி மாவட்டத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வேளாண் பட்ஜெட் குறித்து உரையாற்றிய கே.பி.முனுசாமி, திமுகவின் தேர்தல் அறிக்கையில் 56 வாக்குறுதிகளை விவசாயிகளுக்காக அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு, அதில் முக்கியமான வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படவில்லை என்றார்.

அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் அளிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டு, தற்போது தகுதியுள்ள பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளீர்களே, மீதமுள்ள பெண்கள் உங்களை எப்படி நம்புவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.  ஒரு ஏக்கர் கரும்பை விளைவிக்க 15 ஆயிரம் செலவாகும் நிலையில் , டன்னுக்கு 4 ஆயிரம் என்பது போதுமானதாக இருக்காது என்றும், ஒரு விவசாயிக்கு கடைசியில் 200 முதல் 500 ரூபாய் மட்டுமே லாபம் கிடைக்கதாக கூறினார். தானியம் , எண்ணெய் வித்து உட்பட அனைத்து விவசாய விளை பொருளுக்கும் ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற அவர், தானியங்களை கூட்டுறவு சங்கம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version