தமிழக அரசு திருப்பூர் மருத்துவக் கல்லூரிக்கு முதல் கட்டமாக 100 கோடி ரூபாய் ஒதுக்கியதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
டாலர் சிட்டி என அழைக்கப்படும் திருப்பூரில் மருத்துவக் கல்லூரி துவங்கவேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கல்வியில் சிறந்த விளங்கிய மாவட்டமாக திருப்பூர் திகழ்ந்த போதிலும் மருத்துவக்கல்லூரி இல்லாதது ஒரு குறையாகவே காணப்பட்டது.
மருத்துவக் கல்லூரி இல்லாத திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் துவங்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், முதல்கட்டமாக, கல்லூரிகளுக்கு தலா 100 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.