தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாநில அளவில் 95.37 சதவிகித தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
+2 தேர்வு தேர்வில் 95.37 சதவிகித தேர்ச்சியை பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. திருப்பூரில் மொத்தமாக 24 ஆயிரத்து 835 மாணவ மாணவிகள் தேர்வெழுதிய நிலையில், 23 ஆயிரத்து 686 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
95.23 சதவிகித தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு 24 ஆயிரத்து 316 மாணவ, மாணவிகள் தேர்வெழுதியநிலையில், 23 ஆயிரத்து 155 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவிகிதத்தில் மூன்றாவது இடத்தை பெரம்பலூர் மாவட்டம் பிடித்துள்ளது. இங்கு 8 ஆயிரத்து 410 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இதில் 8 ஆயிரத்து 2 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
95.01 சதவிகிதத்துடன் 4வது இடத்தை கோவை மாவட்டம் பெற்றுள்ளது. இங்கு 35 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வெழுதிய நிலையில், 33 ஆயிரத்து 253 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
5வது இடத்தை 94.97 சதவிகிதம் தேர்ச்சி பெற்று நாமக்கல் மாவட்டம் பிடித்துள்ளது. இங்கு தேர்வெழுதிய 22 ஆயிரத்து 727 மாணவ, மாணவிகளில், 21 ஆயிரத்து 584 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Discussion about this post