திருப்பூர் அருகே அதிக பாரத்துடன் சோளத்தட்டுகளை ஏற்றிச்சென்ற லாரி, மின் கம்பியில் உரசி தீப்பிடித்ததில் முழுவதும் எரிந்து சாம்பலானது. திருப்பூர் சிட்கோ பகுதியில் இருந்து அதிகளவில் சோளத்தட்டுகளை ஏற்றிச் சென்ற லாரி தெற்குப்பாளையம் அருகே மின் கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்தது. இதில் சோளத்தட்டுகளில் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இருப்பினும் லாரி முழுவதும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர்.
Discussion about this post