நீண்ட நாட்களுக்கு பிறகு தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. குளிர்ந்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில், வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.