பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை, இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் புதிய வங்கி கணக்கு துவங்க, பண பரிவர்த்தனை செய்ய உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு பான் எண் அவசியமாகும். அப்படி இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாமல் போய்விடும் எனவும், இதனால் வரும் ஆண்டில் நிதி சம்பந்தமான பரிவர்த்தனைகள் மேற்கொள்வது சிக்கலாகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே அனைத்து தரப்பினரும் தங்களது ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டுமென அறிவுறுத்தி, 2019 செப்டம்பர் 30ம் தேதியை இறுதி நாளாக வருமான வரித்துறை அறிவித்திருந்தது. ஆனால் அதற்குள் அதிகமானோர் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காததால், அதனை நீட்டித்து டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு அரசு மேலும் நீட்டிப்பு வழங்குமா என எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
Discussion about this post