டிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனைகளுடன் நீக்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முத்துகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் டிக் டாக் செயலிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் தடை விதித்தது. இதை தொடர்ந்து, டிக் டாக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரி டிக் டாக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டிக் டாக் மீதான தடை நீக்கம் குறித்து பரிசீலிக்க உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சில நிபந்தனைகளை விதித்து டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
டிக் டாக் செயலியில் சிறுவர்கள்,சிறுமிகள், பெண்கள் குறித்த ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது, சமூக சீர்க்கேட்டினை உருவாக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதிகள் விதித்துள்ளனர். மேலும் ஆபாசம் மற்றும் பிரச்னைக்குரிய வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
Discussion about this post